/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிளஸ் 2 தேர்வில் சாதனை
பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிளஸ் 2 தேர்வில் சாதனை
பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 07, 2024 05:37 AM

புதுச்சேரி : புதுச்சேரி பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 பொதுத் தேர்வில் 99.7 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளது.
இது குறித்து பள்ளி முதல்வர் தேவதாஸ் கூறியதாவது:
எங்கள் பள்ளியில் இந்தாண்டு 398 மாணவர்கள் பிளஸ்2 தேர்வு எழுதினர். இதில் 397 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவீதம் 99.7 சதவீதமாகும். 550 மதிப்பெண்ணிற்கு மேல் 16 மாணவர்கள் மதிப்பெண் எடுத்துள்ளனர். 500 மதிப்பெண் முதல் 549 வரை 63 மாணவர்களும் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுதவிர 329 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளி மாணவர் சந்தீப் 592 மதிப்பெண்ணுடன் முதலிடம், மாணவர் கிஷன் 587 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம், கனீஷ்நாராயணன் 577 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடம் பிடித்தனர்.
26 மாணவர்கள் சென்டம் மதிப்பெண் எடுத்துள்ளனர். மாணவர் கிஷாந்த், இயற்பியல், வேதியியல், கணிதம் என மூன்றுபாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர். 5 மாணவர்கள் இரண்டு பாடங்களில் சென்டம் எடுத்துள்ளனர்.
பாட ரீதியாக பார்க்கும் போது பிரெஞ்சு 11, கணிதம் 3, இயற்பியல் 2, வேதியியல் 1, கம்ப்யூட்டர் சயின்ஸ் 3, வணிகவியல் 5, கணக்கு பதிவியல் 1 பாடங்களில் சென்டம் எடுத்துள்ளனர்.
மாணவர்களின் கடின உழைப்பும், ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஒத்து ழைப்பின் காரணமாக மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து சாதித்துள்ளனர். வெற்றிபெற்றி மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.