ADDED : ஜூலை 07, 2024 03:39 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் ஸ்ரீ ஹரியின் பாகவத உபன்யாசத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலி சார்பில், எல்லப்பிள்ளை சாவடி, சாராதாம்பாள் கோவிலில், ஸ்ரீஹரியின் பாகவத உபன்யாசம் நாளை, 8ம் தேதி துவங்குகிறது. இந்த உபன்யாசம், நாள்தோறும் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை நடக்கிறது.
இதில் பீஷ்ம ஸ்துதி, துருவ சரித்திரம், பிரகலாத சரித்திரம், கஜேந்திர மோட்சம், வாமன அவதாரம், கிருஷ்ண அவதாரம், பால லீலை, சனி கிருஷ்ண லீலை உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில் உபன்யாசம் நடக்க உள்ளது.
வரும், 14ம் தேதி காலை 8:30 மணி முதல் 12:30 மணி வரை உஞ்ச விருத்தி, திவ்ய நாமம் மற்றும் ராதா கல்யாண மகோற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை, விசாகாவால், ருக்மணி கல்யாண சங்கீத உபன்யாசம் நிகழ்த்தப்பட உள்ளது. அன்றைய தினத்தோடு, உபன்யாச நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
இதில், நாள்தோறும் காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை பாகவத மூல பாராயணம் நடக்கிறது. சாரம், ஜெயராம் நகரில் வரும், 12 மற்றும் 13ம் தேதி மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, அஷ்டமதி பஜனை நடக்க உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியினர் செய்து வருகின்றனர்.