தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாக்கம் பிடாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

பாக்கம் பிடாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

பாக்கம் பிடாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்


ADDED : ஜூன் 10, 2024 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2024 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : நெட்டப்பாக்கம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள விநாயகர், முருகப்பெருமான், கன்னியம்மன், பிடாரியம்மன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் விழா வரும் 12ம் தேதி காலை 9.15 மணிக்கு நடக்கிறது.

இதையொட்டி இன்று காலை 6.00 மணிக்கு யஜமானசங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மாலை 4.30 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலப் பிரவேசம், முதல்கால யாக பூஜை நடக்கிறது. நாளை 11ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5.00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.

12ம் தேதி காலை 6.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 8.45 மணிக்கு கடம் புறப்பாடு, 9.15 மணிக்கு விநாயகர், முருகன், கன்னியம்மன், சப்த கன்னியம்மனுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. 9.35 மணிக்கு ஊர் பிடாரியம்மனுக்கும், 10.00 மணிக்கு பிடாரியம்மனுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us