sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாரதியார் பல்கலைக்கூட படிப்புகள் வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு

/

பாரதியார் பல்கலைக்கூட படிப்புகள் வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு

பாரதியார் பல்கலைக்கூட படிப்புகள் வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு

பாரதியார் பல்கலைக்கூட படிப்புகள் வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு


ADDED : ஜூலை 04, 2024 03:30 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பாரதியார் பல்கலைக்கூடத்தில் உள்ள மூன்று படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் பி.பி.ஏ., இசை டிகிரி படிப்பில் வாய்ப்பாட்டு, வீணை, நாதஸ்வரம், புல்லாங்குழல், மிருதங்கம், தவில், இந்துாஸ்தானி வாய்ப்பாட்டு படிப்புகள் உள்ளன. இதேபோல் பி.பி.ஏ., நடன படிப்பில் பரதநாட்டியம், பி.எப்.ஏ., நுண்கலை படிப்பில் ஓவியம், அப்பளைடு ஆர்ட், சிற்பம், டெக்ஸ்டைல் டிசன் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன.

இந்த படிப்புகளுக்கு, www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் கடந்த மே 19ம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்பட்டு வந்தன. ஜூன் 10ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டன. தற்போது விண்ணப்ப பரிசீலனை முடிந்து வரைவு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

வியூவல் ஆர்ட்ஸ் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் மாணவர் தரணி 91.133 மெரிட் மதிப்பெண்ணுடன் முதலிடம், இளவரசன் 88.467 இரண்டாம் இடம், நிதிஷ் 86.467 மூன்றாம் இடம் பிடித்தனர். பி.பி.ஏ., இசை படிப்பில் கனகலட்சுமி 87 முதலிடம், காமேஷ்வரி பரிநிதா 86 இரண்டாம் இடம், ரோசிலா 83 மூன்றாம் இடம் பிடித்தனர்.

பி.பி.ஏ., நடனம் படிப்பில் தனலட்சுமி 77 முதலிடம், ஜீவஜோதி 71.667 இரண்டாம் இடம், வர்ஷினி 71.400 மதிபெண்ணுடன் மூன்றாம் இடம் பிடித்தனர்.

பி.வி.ஏ., எனப்படும் வியூவல் ஆர்ட்ஸ் படிப்பில் 40 இடங்கள்,பி.பி.ஏ., இசை படிப்பில் 20 சீட்டுகள், பி.பி.ஏ., நடன படிப்பில் 15 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வரைவு தரவரிசை பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் நாளை 5ம் தேதி மாலை 6:00 மணிக்குள் centacugnn@dhtepdy.edu.in என்ற இ-மெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us