ADDED : ஏப் 30, 2026 11:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாரதிதாசன் 136வது பிறந்தநாள் விழா தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமை தாங்கினார். செயலர் வள்ளி, லட்சுமிதேவி, நமச்சிவாயம், மாணிக்கம், கலியபெருமாள், ராஜாராம், சுசீலா, கவுசல்யா பிரேம்ராஜ் முன்னிலை வகித்தனர்.
பேராசிரியர் உசேன் அரபு மொழியில், மொழி பெயர்த்த பாரதிதாசன் எழுதிய ஆண் குழந்தை தாலாட்டுப் பாடலின் காணொளியை, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வெளியிட, பாரதிதாசன் மகளிர் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் மஜீத் ரசியா பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, பாரதிதாசன் அறக்கட்டளை மகளிர் மன்றத்தை வசந்தி வேணுகோபால் திறந்து வைத்தார். பேராசிரியர் அசோகன் வாழ்த்தி பேசினார். பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்தி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
‘செந்தமிழ் புரட்சிக் கவி’ தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 50 கவிஞர்கள் பங்கேற்று கவிதை வாசித்தனர். முன்னதாக வேல்விழி சிவக்கொழுந்து வரவேற்றார்.
சரசுவதி வைத்தியநாதன் தொகுத்து வழங்கினார். பத்மநாபன் நன்றி கூறினார்.
