/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை ராஜா நகரில் ரூ.13 லட்சம் செலவில் தார்சாலை பணிக்கு பூமி பூஜை

ADDED : ஜூலை 08, 2024 05:37 PM

திருபுவனை:
திருபுவனை ராஜா நகரில் ரூ.13 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பரிந்துரையில் பேரில், ஆதி திராவிடர் மேம்பாட்டு வரைநிலைக் கழகத்தின் சார்பில் திருபுவனை ராஜா நகரில் ரூ.13 லட்சம் செலவில் உட்புற சாலைகள் மற்றும் விரிவாக்க சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.
விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தலைமையேற்று பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பேட்கோ மேலாண் இயக்குனர் சிவக்குமார், செயற்பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் திருவருட்செல்வன், ஒப்பந்ததாரர் தட்சணாமூர்த்தி மற்றும் ஊர் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.