/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் மோதி போலீசுக்கு எலும்பு முறிவு
/
பைக் மோதி போலீசுக்கு எலும்பு முறிவு
ADDED : ஆக 25, 2024 05:35 AM
கான்ஸ்டபிளுக்கு எலும்பு முறிவு
புதுச்சேரி: கோரிமேட்டில் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போலீஸ் மீது பைக் மோதிய விபத்தில், கான்ஸ்டபிலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
கோரிமேடு சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் ஜிப்மர் எல்லை அருகே நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோரிமேட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த பைக்கை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர்.
அப்போது, வேகமாக வந்த பைக் ஒன்று மேட்டுப்பாளையம் வி.பி.சிங்., நகரைச் சேர்ந்த கான்ஸ்டபிள் விஜய், 30; மீது மோதியது.
இதில் தவறி விழுந்த கான்ஸ்டபிள் விஜய்க்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனடியாக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திய நபர் பைக்குடன் வடக்கு போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

