ADDED : ஜூலை 12, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நுாலகத்தின் அருகில் நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கதிர்காமம் ஆனந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் சங்கர், 27. இவர், அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இதற்காக இவர் புதுச்சேரி ரோமன் ரோலன் நுாலகத்திற்கு செல்வது வழக்கம்.
கடந்த 9ம் காலை 11:30 மணிக்கு தனது பல்சர் பைக்கை (பிஒய்01பிஆர்6157) கொம்பங்கி வீதியில் நிறுத்திவிட்டு, நுாலகத்திற்குள் சென்று விட்டார். இரவு 8:30 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பெரியகடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
