ADDED : மே 11, 2026 05:51 PM
காரைக்கால்: காரைக்காலில் பைக்கில் உரிமையாளர் மகனுடன் பைக்கை திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால்மேடு சுனாமி நகரை சேர்ந்த கலியபெருமாள் மகன் தங்கமணி, 45; இவர் மின்துறையில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவியின் தங்கை கணவர் நீலமேகம் தனக்கு சொந்தமான பைக்கில் கடந்த 23ம் தேதி தனது மகன் பிரகதீஷ் என்பவருடன் சென்றுள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் வாசலில் பைக்குடன் மகனை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது பைக் மற்றும் மகனை காணவில்லை.
அவரை தேடிபோது காமராஜ் சாலை அருகில் பிரகதீஷ் அழுதுகொண்டு நின்றிருந்தார். விசாரணையில் மர்மநபர் ஒருவர் பென்சில் கடைக்கு செல்வதாக கூறி , நீலமேகன் மகனை பைக்கில் மர்ம நபர் அழைந்து ச்சென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து நுாதன முறையில் பைக்கை திருடி சென்ற நபரை தேடிவருகின்றனர்.
