ADDED : ஜூன் 16, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பைக் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உழவர்கரை குண்டு சாலையைச் சேர்ந்தவர் முனசாமி, 42; மொபைல் கடை வைத்துள்ளார்.
இவர் கடந்த 9ம் தேதி மாலை 3:00 மணியளவில் அவரது பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்றார். மாலை 5:00 மணிக்கு திரும்பி வந்துபார்த்தபோது, பைக்கை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
புகாரின் பேரில் ரெட்டியார்பாளயைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.