/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
/
தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
ADDED : செப் 12, 2024 02:16 AM
விழுப்புரம் :' தமிழகத்தில் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நிருபர்களிடம் கூறியதாவது:
புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தமிழகத்திற்கு அழுத்தம் தர முடியாது. புதிய கல்விக் கொள்கையிலுள்ள சிறந்த அம்சங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் மாநிலத்துக்கென கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைத்து, அவர்களின் பரிந்துரைகளின்படி கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளோம்.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் 3,5,8ம் வகுப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் நிலை ஏற்படும். இதனால் இடைநிற்றல் அதிகரிக்கும். ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பயில முடியாத நிலை ஏற்படும்.
முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி காலத்திலேயே இருமொழிக் கொள்கைதான் இருந்தது. அதைத்தான் தற்போதைய ஆட்சியிலும் பின்பற்றுவோம்.
உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. 53 சதவீதம் பேர் உயர்கல்வி பயின்று வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மறுப்பதால் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதாக, மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி, இருமொழிக் கொள்கைதான் தமிழகத்தில் இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
வி.சி., கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு அ.தி.மு.க.,- த.வெ.க., கட்சிகளுக்கு, அவர்கள் கொள்கை ரீதியாக அழைப்பு விடுத்துள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
பேட்டியின் போது, எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் நகர்மன்ற சேர்மன் ஜனகராஜ் உடனிருந்தனர்.