ADDED : ஜூலை 22, 2026 09:52 PM
வில்லியனுார்: பா.ஜ பிரமுகர் அங்குதாஸ் பிறந்தநாள் விழா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்.
மூலகுளம் அடுத்த காரைகோவிந்தன் நகரில் உள்ள அங்குதாஸ் இல்லத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமார், ராமு, நாராயணசாமி, மோகன்தாஸ், அழகானந்தம், முன்னாள் சேர்மன் பாலமுருகன், பா.ஜ., நிர்வாகிகள் அம்மாவாசை, ஏம்பலம் தொகுதி தலைவர் நந்தகுமார், சக்கரவத்தி, முன்னாள் கவுன்சிலர் வீரமுத்து, உழவர்கரை தொகுதி பா.ஜ நிர்வாகிகள் அருமைசெல்வம், வெற்றிவேல், காமராஜ், பன்னீர்செல்வம், செல்வகுமார், கிருஷ்ணகுமார், ஏம்பலம் தொகுதி பா.ஜ நிர்வாகிகள் அய்யனார், ராகவன், ஜெயமூர்த்தி, பிரகாஷ், அருள்முத்து, சங்கர், முருகானந்தம், பூபதி, கார்த்திக், சிவக்கொழுந்து, பத்மகுமார், கருப்பூர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் செந்தில்குமார், முருகேசன் உட்பட பலர் நேரில் வாழ்த்தினர்.
பிறந்தநாளை முன்னிட்டு கோர்க்காடு நடுநிலைப் பள்ளி மற்றும் பிச்சைவீரன்பேட் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம் எழுதுபொருள் வழங்கினர். மேலும் கோர்க்காடு புஷ்பகாந்தி மற்றும் ரெட்டியார்பாளையம் அன்பு இல்லம் அன்னை தெரசா காப்பகத்தில் உள்ள முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி பிறந்தநாள் கொண்டாடினர்.
