sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரியில் மீண்டும் ஆலோசனை

பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரியில் மீண்டும் ஆலோசனை

பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரியில் மீண்டும் ஆலோசனை


ADDED : ஜூலை 12, 2024 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2024 05:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள பா.ஜ., அமைச்சர்களை மாற்ற வேண்டும். தொகுதிக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என, பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அதிருப்தி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார். அதை ஏற்காத எம்.எல்.ஏ.,க்கள் அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முறையிட உள்ளனர்.

இந்நிலையில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நேற்று சட்டசபையில் ஒன்று கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். இந்த ஆலோசனை 1 மணி நேரம் நடந்தது.

பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கூறுகையில், 'நாங்கள் பா.ஜ.,வில் தான் உள்ளோம். எங்களது கோரிக்கைகளை பா.ஜ., தலைமையிடம் விரிவாக விளக்கியுள்ளோம். எங்களை உள்ளங்கையில் வைத்து தாங்கச் சொல்லவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறியுள்ளோம்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us