/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரத்துறை இயக்குனர் நியமிக்க பா.ஜ., கோரிக்கை
/
சுகாதாரத்துறை இயக்குனர் நியமிக்க பா.ஜ., கோரிக்கை
ADDED : செப் 11, 2024 11:24 PM
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் சுகாதாரத்துறை இயக்குனரை நியமிக்க வேண்டும் என, பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் வீரராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி மாநில சுகாதாரத் துறையில், காலதாமதம் செய்யாமல் உடனடியாக இயக்குனரை நியமிக்க வேண்டும். இதற்கு முன் இருந்த இயக்குனர் ஸ்ரீராமுலு கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார்.
இதனால், வேறு ஒருவர், கூடுதல் பொறுப்பாக இயக்குனர் பதவி வகித்து வருகிறார். இந்த பதவியானது, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளின் உள்கட்டமைப்புகள், நிர்வாக செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கண்காணித்து, நிர்வகிக்கக்கூடியது.
அதனை கூடுதல் பொறுப்பாக ஒருவரை நியமித்து நிர்வகிப்பது மிகுந்த சிரமம். இதனால் சுகாதாரத்துறையின் பல்வேறு பணிகள் தடைபட்டு, தாமதப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில், முதல்வர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலர் உடனடியாக சுகாதாரத்துறை இயக்குனரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.