எல்நினோ பாதிப்புகளை கண்காணிக்க நிபுணர் குழு பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் கோரிக்கை
எல்நினோ பாதிப்புகளை கண்காணிக்க நிபுணர் குழு பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2026 09:41 PM
புதுச்சேரி: எல்நினோ பாதிப்புகளை கண்காணிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும் என, பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் வீரராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய காலநிலை மற்றும் பருவ காலமாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், நாடு முவதும் எல்நினோ பாதிப்புகளை எதிர்கொள்ள மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நிபுணர் குழுக்களை அமைக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதனடிப்படையில், தமிழக முதல்வர் விஜய், நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளார்.
எனவே, புதுச்சேரி முதல்வர் மற்றும் தலைமை செயலர், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியகளில் எல்நினோ ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும். பாதிப்புகளை கண்காணிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
