/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுச்சாவடி முற்றுகை முயற்சி வாக்காளர்கள் விரட்டியடிப்பு
/
ஓட்டுச்சாவடி முற்றுகை முயற்சி வாக்காளர்கள் விரட்டியடிப்பு
ஓட்டுச்சாவடி முற்றுகை முயற்சி வாக்காளர்கள் விரட்டியடிப்பு
ஓட்டுச்சாவடி முற்றுகை முயற்சி வாக்காளர்கள் விரட்டியடிப்பு
ADDED : ஏப் 20, 2024 04:53 AM
வானுார் : விழுப்புரம் லோக்சபா தொகுதி வானுார் அடுத்த பூத்துறை ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், நேற்று காலை அப்பகுதி மக்கள் ஓட்டு போட சென்றனர். அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், 20க்கும் மேற்பட்டோருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டுபோட அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் வார்டு கவுன்சிலர் கல்பனா தலைமையில், நேற்று மாலை 4:00 மணிக்கு, ஓட்டுச்சாவடி மையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களிடம் ஆரோவில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை அவர்கள் ஏற்க மறுத்ததால், அவர்களை துணை ராணுவத்தினரின் உதவியோடு, விரட்டியடித்து கலைத்தனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.