/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புளு ஸ்டார் பள்ளி விளையாட்டு போட்டி பரிசளிப்பு
/
புளு ஸ்டார் பள்ளி விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ADDED : ஆக 29, 2024 07:16 AM

வில்லியனுார்: புளு ஸ்டார் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 39வது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விளையாட்டு விழாவை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை இணை இயக்குனர் வைத்தியநாதன் துவக்கிவைத்தார்.
பரிசளிப்பு விழாவிற்கு பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வரலட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளி துணை முதல்வர் சாலை சிவசெல்வம் வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை இணை பேராசிரியர் டாக்டர் ராம்மோகன்சிங் பங்கேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
பள்ளி நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.