தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : ஜூன் 04, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்பநாயுடன் சோதனை நடத்தப்பட்டது.

கடலுார் தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 1:45 மணியளவில் வெடிக்கும் என மண்டல அலுவலகத்திற்கு இ–மெயில் மிரட்டல் விடுக்கப்பட்டது. மண்டல அலுவலக அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று மதியம் 1 மணியளவில் கடலுார் தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாயுடன் சென்று சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து மிரட்டல் வெறும் புரளி எனத்தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us