/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணம்; காரைக்காலில் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்
/
எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணம்; காரைக்காலில் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்
எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணம்; காரைக்காலில் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்
எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணம்; காரைக்காலில் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்
ADDED : மே 03, 2024 06:25 AM

காரைக்கால் : சீன எல்லையில் மரணமடைந்த காரைக்காலைச் சேர்ந்த இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி, காரைக்கால், திருப்பட்டினம், போலகம் வீரன்கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் பிரேம்குமார், 47; இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர். கடந்த 10 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் திபெத் எல்லையில் பணியாற்றி வந்தார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன், தனது சொந்த ஊருக்கு வந்து, பின், பணிக்கு திரும்பியுள்ளார்.
சீனா, திபெத் எல்லையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டபோது பிரேம்குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சை பெற்றுவந்த பிரேம்குமார் கடந்த 30ம் தேதி மரணம் அடைந்தார்.
இதனையடுத்து பிரேம்குமார் உடல் நேற்று விமான மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் அவரது சொந்த ஊரான காரைக்கால், திருப்பட்டினம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின், அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இன்று 3ம் தேதி முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
வீரமரணம் அடைந்த பிரேம்குமாருக்கு மனைவி செவ்வந்தி, ஐந்து வயதில் கீர்த்தி என்ற மகன் உள்ளனர். அவரது மனைவி தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
பிரேம்குமார் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில், உரிய அரசு மரியாதை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.