sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா

மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா

மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா


ADDED : ஜூன் 04, 2024 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2024 04:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : கரசூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று சக்தி கரகம் மற்றும் சாமி வீதியுலா நடந்தது.

சேதராப்பட்டு அருகே உள்ள கரசூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலய பிரமோற்சவ விழா கடந்த 31ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்து வரும் விழாவில் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், தீபாராதனையும் நடந்து வருகிறது.

விழாவில் நேற்று இரவு 7:00 மணியளவில் சக்தி கரகம் மற்றும் சாமி வீதியுலா நடந்தது. இன்று(4ம் தேதி) பகல் 12:30 மணியளவி பிடாரி அம்மன் உத்தரவு பெருதல், அதனை தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை ஊரனி பொங்கல் வைத்தல், இரவு 7:00 மணிக்கு மேல் கும்பம் கொட்டுதல் அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை (5ம் தேதி) மஞ்சள் நிராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us