வெஸ்ட் மெட் மருத்துவனையில் மூளை கட்டி அகற்றி சாதனை
வெஸ்ட் மெட் மருத்துவனையில் மூளை கட்டி அகற்றி சாதனை
ADDED : ஆக 11, 2024 05:14 AM
புதுச்சேரி : வெஸ்ட் மெட் மருத்துவமனையில் மூளை கட்டியை 7 மணி நேரம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
புதுச்சேரி இ.சி.ஆர்., சாலை லாஸ்பேட்டையில் வெஸ்ட் மெட் மருத்துவமனை உள்ளது. இங்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த நோயாளி ராஜ் என்பவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தார்.
அவரை, பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூளையில் பெரிய கட்டி இருப்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்தனர். அந்த நோயாளியின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி, நரம்பியல் சிறப்பு மருத்துவர் சந்தோஷ், மயக்கவியல் மருத்துவர் மதன் அடங்கிய மருத்துவ குழுவினர் நோயாளியின் மூளையில் இருந்த கட்டியை 7 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
நோயாளியின் மூளையில் இருந்த கட்டியை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றிய மருத்துவ குழுவினரை மருத்துவமனை இயக்குனர் அருள்மணி பாராட்டினார்.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சந்தோஷ் கூறுகையில், 'மூளையில் இருந்த பெரிய கட்டியை 7 மணி நேரத்திற்கு பின் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. நோயாளி நலமாக உள்ளார். இது போன்ற மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை சென்னையில் மட்டுமே நடக்கிறது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளி 7 நாட்களுக்கு பின் முழு குணமடைந்து வீடு திரும்பினார்' என்றார்.
