ADDED : ஆக 01, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கோர்ட் வளாகத்தில் பித்தளை வால்வு திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி கோர்ட் வளாகத்தில், ஊழியர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த மாதம் 20ம் தேதி, தண்ணீர் வினியோகிக்கப் பயன்படும், பித்தளை வால்வை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து அங்கு ஒப்பந்த ஊழியராக பணிபுரியும், உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த சுமன் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
