/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுமணப்பெண் தற்கொலை காரணமான மணமகன் கைது
/
புதுமணப்பெண் தற்கொலை காரணமான மணமகன் கைது
ADDED : மே 28, 2024 03:43 AM
பண்ருட்டி, : புதுமணப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மணமகனை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நாகமுத்து மகள் சரஸ்வதி,19; பி.எஸ்சி., இறுதி ஆண்டு படித்து வந்த இவருக்கும் பண்ருட்டி அடுத்த சீரங்குப்பத்தை சேர்ந்த ஜனார்த்தனன் மகன் ஜெய்கணேஷ் என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் சரஸ்வதி வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சரஸ்வதியின் தாய் சுமதி,40; அளித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் ஆர்.டி.ஓ., அபிநயா நேற்று விசாரணை நடத்தினார். அதில், சரஸ்வதி தற்கொலையில் அவரது கணவர் ஜெய்கணேஷிற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து காடாம்புலியூர் போலீசார் ஜெய்கணேஷை நேற்று கைது செய்தனர்.