/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிர்லியன்ட் இன்ஸ்டிடியூட் புதிய கிளை திறப்பு
/
பிர்லியன்ட் இன்ஸ்டிடியூட் புதிய கிளை திறப்பு
ADDED : ஆக 13, 2024 05:04 AM

புதுச்சேரி: புதுச்சேரி பிர்லியன்ட் இன்ஸ்டிடியூட் புதிய கிளை திறப்பு விழா நடந்தது.
சபரி வித்யாஸ்ரமம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் பிர்லியன்ட் இன்ஸ்டிடியூட் பல்வேறு அரசு மற்றும் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்நிறுவனத்தில் பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் மாநில மற்றும் மத்திய அரசு உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு நடந்த எல். டி. சி போட்டித் தேர்வில் இந்நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் மாநில அளவில் முதல் இடமும், அமைச்சக உதவியாளர் பணியிடத்திற்கும் 150 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி புதிய பஸ் நிலையம் பின்புறம் ஆல்பா பள்ளி அருகில், கண்ணன் நகர், எண் 7,8 இரண்டாவது மாடிடயில் பிரில்லியன்ட் இன்ஸ்டிடியூட் கிளை நிறுவப்பட்டு திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, எஸ்.பி.,க்கள் முருகவேல், நல்லாம் கிருஷ்ணாபாபு, வருவாய் அதிகாரி அருண் ஐயாவு, சபரி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அமுதவாணன், பிரில்லியன்ட் இன்ஸ்டிடியூட் பிரண்ஜெய்சி, முரளி, பிரில்லியன்ட் இன்ஸ்டியூட்டின் இயக்குனர்கள் நெடுஞ்செழியன், ஸ்ரீதரன், குமார், அபிராமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்து கூறினர்.
அரசு பணி போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள்,புதுச்சேரி அரசு வழங்கும் வேலை வாய்ப்பு விபரங்களை தெரிந்து கொள்ள 82208 99996 எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேலும் bimpondy.com என்ற இணையதளம் பார்வையிடலாம்.

