தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்


ADDED : மார் 02, 2025 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2025 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை துவங்குகிறது.

பி.எஸ்.என்.எல்., உதவி பொதுமேலாளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்,. சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அலுவலகம், லாஸ்பேட்டை ராஜிவ் பார்க், பத்துக்கண்ணு ஜங்ஷன், கரியமாணிக்கம், வில்லியனுார், கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி, தவளக்குப்பம், மதகடிப்பட்டு மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

சிறப்பு மேளாவில் 108 ரூபாய் மதிப்புள்ள சிம்கார்டு 50 ரூபாய் மட்டுமே. இந்த சிம்கார்டில் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாத அழைப்புகள் இலவசம். வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள சிம்கார்டுகள் பற்றி விபரம் அறிந்து கொள்ள 94428 24365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே. புதிய 4ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 ஜிபி இலவச டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us