தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்


ADDED : ஏப் 25, 2024 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:புதுச்சேரியில், பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் இன்று துவங்க உள்ளதாக, முதன்மை மேலாளர் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை மேளா, இன்று துவங்குகிறது. முகாம் வரும் 30ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.

மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை தபால் அலுவலகம் அருகில், திருக்கனுார், கரியமாணிக்கம், மதகடிப்பட்டு, கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில், அரும்பார்த்தபுரம், மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி அருகில், வில்லியனுார், ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலையம் ஆகிய இடங்களில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய எண்ணை மாற்றாமல், அதிவேக எப்.டி.டி.எச் தொழில்நுட்பத்திற்கு, தங்கள் லேண்ட்லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் முற்றிலும் இலவசம்.

புதிய எப்.டி.டி.எச் இணைப்பு ரூ.329 முதல் கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு, ரூ.999,க்கு கிடைக்கும். ரூ.269 மதிப்புள்ள சிம்கார்டு, ரூ.50,க்கு வழங்கப்படுகிறது. இந்த சிம்கார்டில், 45 நாட்களுக்கு தினசரி 2 ஜி.பி டேட்டா, அளவில்லாமல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம்.

பிற நெட்வொர்க்கில் இருந்து, பி.எஸ்.என்.எல் வருபவர்களுக்கு, ரூ.269, மதிப்புள்ள சிம் இலவசம். தற்போதுள்ள, 2ஜி, 3 ஜி சிம் வைத்திருப்பவர்கள், இலவசமாக, 4 ஜி சிம்மிற்கு மேம்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us