பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா புதுச்சேரியில் 4 நாள் நடக்கிறது
பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா புதுச்சேரியில் 4 நாள் நடக்கிறது
ADDED : மே 09, 2026 10:30 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல். சிறப்பு மேளா 4 நாட்களுக்கு நடக்கிறது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல். அலுவலக செய்திகுறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சார்பில் சிறப்பு மேளா நாளை (11ம் தேதி) துவங்கி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. சிறப்பு மேளா ரங்கபிள்ளை வீதியில் உள்ள தொலைபேசி அலுவலகம், மேட்டுப்பாளையம் ஆனந்தா இன் அருகில், நாவற்குளம் அன்னை நகர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், திருவண்டார் கோவில், வில்லியனுார், கரியமாணிக்கம், அரியாங்குப்பம், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில், வில்லியனுார் சங்கரா வித்யாலயா பள்ளி எதிரில், ஆரியபாளையம், மடுகரை, திருக்கனுார், கோட்டக்குப்பம் இந்தியன் பேங்க் அருகில், லாஸ்பேட்டை ராஜிவ் பார்க் எதிரில், கரிக்கலாம்பாக்கம் மற்றும் வில்லியனுார் ஆகிய இடங்களில் மேளா நடக்கிறது.
இதில், 4 ஜி சேவையை ஊக்குவிக்க வாடிக்கையாளர்களுக்கு எப்ஆர்சி 1 பிரிடம் பிளான் ஒரு ரூபாய்க்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டில் 30 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த சலுகை அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள், அனைத்து விற்பனையாளர்கள், ரீட்டைலர்களின் கடைகள், மெயின் தொலைபேசி நிலைய வாடிக்கையாளர் சேவை மையம், மேளா நடைபெறும் இடங்களில் சிம் கார்டு கிடைக்கும். 2 மற்றும் 3 ஜி சிம் கார்டை புதிய 4ஜி சிம்மாக இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
