/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று துவக்கம்
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று துவக்கம்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று துவக்கம்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று துவக்கம்
ADDED : மே 08, 2024 01:35 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று துவங்க உள்ளதாக, முதன்மை மேலாளர் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு: புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம், இன்று முதல் (08--05--2024) வரும், 10ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடக்கிறது.
இந்த முகாம், மேட்டுப் பாளையம், முதலியார்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அலுவலகம் அருகில், கரிய மாணிக்கம், மதகடிப்பட்டு, கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில், அரும்பார்த்தபுரம், சாரம் பழைய கலெக்டர் அலுவலகம், மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி அருகில், வில்லியனுார், ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய எண்ணை மாற்றாமல், அதிவேக எப்.டி.டி.எச் தொழில் நுட்பத்திற்கு தங்கள் லேண்ட் லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் முற்றிலும் இலவசம்.
புதிய எப்.டி.டி.எச் இணைப்பு, ரூ.329 முதல் மற்றும் கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு, ரூ.999க்கு கிடைக்கும். ரூ.269 மதிப்புள்ள சிம் கார்டு ரூ.50க்கு கிடைக்கும்.
இந்த சிம்கார்டில், 45 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு, 2 ஜி.பி டேட்டா, அளவில்லாமல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., இலவசம். பிற நெட்வொர்க்கில் இருந்து, பி.எஸ்.என்.எல் வருபவர்களுக்கு, ரூ.269 மதிப்புள்ள சிம் முற்றிலும் இலவசம்.
தற்போதுள்ள 2ஜி, 3ஜி சிம் வைத்திருப்பவர்கள், இலவசமாக, 4 ஜி, சிம்மிற்கு மேம்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

