பி.டெக்., நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை: திருத்தப்பட்ட வரைவு தகுதி பட்டியல் வெளியீடு
பி.டெக்., நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை: திருத்தப்பட்ட வரைவு தகுதி பட்டியல் வெளியீடு
UPDATED : ஜூலை 23, 2026 09:59 PM
ADDED : ஜூலை 23, 2026 07:52 PM
புதுச்சேரி: பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கான திருத்தப்பட்ட வரைவு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருந்தால் நாளைக்குள் சமர்ப்பிக்கலாம்.
புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரிகளில் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்காக, அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில், ஆண்டுதோறும் 10 சதவீத இடங்கள் லேட்ரல் என்ட்ரி சேர்க்கை முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட சூழ்நிலையில், திருத்தப்பட்ட வரைவுத் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. www.centacpuducherry.in என்ற வலைத்தளத்தில் இந்த பட்டியலை பார்வையிடலாம்.
விண்ணப்பங்களின் நிலை அந்தந்த மாணவர்களின் டேஷ்போர்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், மாணவர்கள் தங்கள் டேஷ்போர்டில் உள்ள அப்ஜக்சன் இணைப்பின் மூலம் நாளை 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம். கல்விச் சரிபார்ப்பு நிலையில், 'பெயில்டு' என, குறிப்பிடப்பட்டு இருந்தால், மாணவர்கள், தங்களது அசல் டிப்ளமோ மதிப்பெண் பட்டியல்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை நாளை 25, 2026 மாலை 5:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குடியிருப்பு, பாடப்பிரிவு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு கோரி, இதுவரை புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களைச் சமர்ப்பிக்காதவர்கள் நாளை 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பி.டெக்., நேரடி சேர்க்கைக்கான சீட்டுகள் குறித்த விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் சுற்று ஒதுக்கீட்டிற்கான பாடப்பிரிவு விருப்பங்களை மாணவர்கள் நாளை 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் புதுப்பிக்கலாம். விருப்பத்தேர்வுகள் எதையும் குறிப்பிடாத மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படாது. இது குறித்த எஸ்.எம்.எஸ்., மாணவர்களின் தகவலுக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு 0413-2655570 அல்லது 0413-2655571 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
