/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்த பூர்ணிமா முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
/
புத்த பூர்ணிமா முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : மே 23, 2024 05:39 AM
புதுச்சேரி : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு முதல்வர்ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தி:
புத்த மதத்தை நிறுவிய கவுதம புத்தரின் வாழ்க்கையின் மூன்று முக்கிய நிகழ்வுகளான அவரது பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவற்றைநினைவு கூறும் புத்த பூர்ணிமா 'மூன்று முறை ஆசீர்வதிக்கப்பட்ட பண்டிகை' என்று உலகெங்கிலும் உள்ள பவுத்தர்களால் கொண்டாடப்படுகிறது.
துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கான வழியைக் காட்டிய புத்தபெருமான், நாம் நம் வாழ்வில், அனைத்து உயிரினங்கள் மீதும் வளர்த்துக்கொள்ள வேண்டிய அன்பு, கருணை மற்றும் அகிம்சையின் முக்கியத்துவத்தை போதித்தவர். அவரது ஞானம், செறிவு மற்றும் ஒழுக்கம் பற்றிய போதனைகள் இன்றைய நவீன காலத்திற்கும் பொருத்தமானவை.
புத்தபிரான் போதித்த அகிம்சை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் வழியைப் பின்பற்றி, அன்பான, அமைதியான மற்றும் இரக்கமுள்ள ஓர் உலகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் புத்த பூர்ணிமா நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

