/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொலைநோக்கு இல்லாத பட்ஜெட்; அ.தி.மு.க., அன்பழகன் கருத்து
/
தொலைநோக்கு இல்லாத பட்ஜெட்; அ.தி.மு.க., அன்பழகன் கருத்து
தொலைநோக்கு இல்லாத பட்ஜெட்; அ.தி.மு.க., அன்பழகன் கருத்து
தொலைநோக்கு இல்லாத பட்ஜெட்; அ.தி.மு.க., அன்பழகன் கருத்து
ADDED : ஆக 03, 2024 04:33 AM
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் பட்ஜெட் குறித்த கருத்து தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தொகையான ரூ. 12,700 கோடியை வெளிக்கடன் பெறாமல் அனைத்து செலவினங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த முடியும். மக்களை பாதிக்காத பல்வேறு பொருட்களுக்கு வரி விதிப்பின் மூலம் ரூ. 2,000 கோடி வருவாயை ஈட்ட முடியும். ஆனால், அரசு கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் மதுபான விற்பனை, கொள்முதல் விநியோக விலை அனைத்தையும் தனியார்களே நடத்துவதால், ஆண்டுக்கு ரூ.1500 கோடிக்கு மேல் அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியார் உரிமையாளர்களுக்கு செல்கிறது.
ஆட்சியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளையும் திறந்து பொது வினியோக திட்டத்தை மீண்டும் துவக்கி கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அ.தி.மு.க.,வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
மூடப்பட்ட லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறக்கப்படும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இந்த பட்ஜெட் சில நலத்திட்டங்களுக்கான பட்ஜெட்டாக இருந்தாலும், மாநில வளர்ச்சியில் தொலைநோக்கு சிந்தனை இல்லாத பட்ஜெட்டாக உள்ளது' என்றார்.
மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணை செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.