/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
ADDED : மார் 05, 2025 04:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் 48 ம் ஆண்டு மயானக்கொள்ளை விழா நேற்று இரவு நடந்தது.
கோவிலில் இருந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் தேரில் வீதியுலாவாக சென்று, 45 அடி சாலை, ஜீவா நகரில் அமைக்கப்பட்டிருந்த வல்லாளன் கோட்டையை அழிக்க, பக்தர்கள் வெள்ளத்தில் எழுந்தருளினார். அம்மன் வேடம் அணிந்த பக்தர்கள், வல்லாள கோட்டையை அழித்தனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் நிறைவேற காய்கறி, சில்லரை காசுகளை வாரி இறைத்தனர். வைத்திலிங்கம் எம்.பி., காங்., காமராஜர் நகர் தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ், மணி, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், முன்னாள் கவுன்சிலர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.