/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் கண்ணாடி உடைப்பு; மர்ம நபருக்கு வலை
/
பஸ் கண்ணாடி உடைப்பு; மர்ம நபருக்கு வலை
ADDED : ஏப் 27, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு தமிழக அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் புதுச்சேரி வழியாக சென்று கொண்டிருந்தது. நைனார்மண்டபம் வழியாக பஸ் சென்றபோது, அங்கு நின்ற மர்ம நபர் திடீரென கற்களை வீசி பஸ்சின் முன் பக்க கண்ணாடியை சேதப்படுத்தி, தப்பிச் சென்றார்.
இதுகுறித்து, பஸ் டிரைவர், பூமாலை கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

