/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் மீது பஸ் மோதி கணவன், மனைவி பலி
/
பைக் மீது பஸ் மோதி கணவன், மனைவி பலி
ADDED : மே 01, 2024 07:09 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பைக் மீது தனியார் கல்லுாரி பஸ் மோதியதில், கணவன் மனைவி பலியாகினர். படுகாயமடைந்த மகன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார், 42. இவர் தனது மனைவி சரிதா, 35; மகன் குரு, 10, ஆகியோருடன் வடலுாரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று பைக்கில் சென்றார்.
நேற்று மாலை 3:00 மணியளவில், கடலுார் - விருத்தாசலம் சாலையில் சாத்தமங்கலம் அருகே திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த தனியார் கல்லுாரி பஸ், செல்வக்குமார் பைக் மீது பலமாக மோதியது. இதில், செல்வக்குமார், சரிதா சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
படுகாயமடைந்த சிறுவன் குருவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிறுவன் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.