/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் நிலைய கட்டுமான பணிகள் நேரு எம்.எல்.ஏ., ஆய்வு
/
பஸ் நிலைய கட்டுமான பணிகள் நேரு எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூலை 20, 2024 04:45 AM

புதுச்சேரி: ராஜிவ்காந்தி அரசு பஸ் நிலையத்தில் நடந்து வரும், புதிய கட்டுமான பணிகளை, நேரு எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
புதுச்சேரி, உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை சாலையில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அரசு பஸ் நிலையத்தில், புதிய கட்டுமான பணிகள் 'ஸ்மார்ட்' சிட்டி திட்ட நிதி உதவியுடன் நடந்து வருகின்றன. இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ., நேரு, நேற்று ஆய்வு செய்தார்.
கட்டுமான பணிக்காக தற்போது, ஏ.எப்.டி., மைதானத்தில் பஸ் நிலையம் இயங்கி வருகிறது.
இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள்பாதிப்படைந்து வருகின்றனர்.
அதனால் இதனை போக்கும் வகையில், தற்போது கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தில், விரைவாக பணிகளை முடித்து, ஓரிரு மாதங்களுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என அதிகாரிகளிடம், நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, 'ஸ்மார்ட்' சிட்டி திட்ட தலைமை அதிகாரி ருத்ர கவுடா, ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் கந்தசாமி, நகராட்சி செயற்பொறியாளர்சிவபாலன், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுது மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள், மற்றும் மனித நேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.