/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர் பட்டயப்படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
/
ஆசிரியர் பட்டயப்படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
ஆசிரியர் பட்டயப்படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
ஆசிரியர் பட்டயப்படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : செப் 18, 2024 04:23 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், ஆசிரியர் பட்டயப்படிப்பில் காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கல்வித்துறையில், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், 2024-25ம் கல்வி ஆண்டிற்கான, இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப்படிப்பில் காலியாக உள்ள இடங்கள், நேரடி சேர்க்கை மூலம் இன்று முதல் வரும், 30ம் தேதி வரை நிரப்பப்பட உள்ளன.
இந்த பட்டயப்படிப்பில், சேர விரும்புவோர் மேல்நிலை பள்ளித்தேர்வில் அல்லது அதற்கு சமமான தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், அசல் சான்றிதழ்களுடன் லாஸ்பேட்டை, தொல்காப்பியர் வீதியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, அனைத்து வேலை நாட்களிலும், சேர்க்கை நடைபெறும். பிற மாநில மாணவர்களும் நேரடி சேர்க்கையில் பங்கு பெறலாம் என, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.