/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளர் வைப்பு நிதி தொடர்பாக புதுச்சேரி, காரைக்காலில் 27ல் முகாம்
/
தொழிலாளர் வைப்பு நிதி தொடர்பாக புதுச்சேரி, காரைக்காலில் 27ல் முகாம்
தொழிலாளர் வைப்பு நிதி தொடர்பாக புதுச்சேரி, காரைக்காலில் 27ல் முகாம்
தொழிலாளர் வைப்பு நிதி தொடர்பாக புதுச்சேரி, காரைக்காலில் 27ல் முகாம்
ADDED : ஆக 24, 2024 06:10 AM
புதுச்சேரி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான முகாம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 27ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, புதுச்சேரி மண்டல, வருங்கால வைப்பு நிதி ஆணையர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி தொடர்பாக முகாம், வரும் 27ம் தேதி, புதுச்சேரி - விழுப்புரம் சாலை, வடமங்கலம், அப்பாசாமி ஆக்குலர் டிவைசஸ் பிரைவேட் லிமிடெடில் நடக்கிறது.
அதே போல, காரைக்காலில், பஜன்கோ மற்றும் ஆர்.ஐ., பகுதியில், காலை 9:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடக்கிறது.
முகாமில், வருங்கால வைப்பு நிதி மற்றும் சட்ட விதிகள், ஒழுங்குமுறைப்படி புதியதாக துவங்கப்பட்ட நிறுவனங்களுடைய முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்குதல். தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் விளக்குதல், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றி விளக்குதல், ஓய்வூதிதாரர் களுக்கு டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட வைப்பு நிதி தொடர்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.
முகாமில், பங்குபெற விரும்புவர்கள், தங்களின் விபரங்களை, https://docs.google.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

