தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் ஓட்டு சேகரிப்பு

என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் ஓட்டு சேகரிப்பு

என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் ஓட்டு சேகரிப்பு


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 06:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 06:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி உடையார் நகர், வன்னியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில், என்.ஆர். காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் தீவிரமாக ஓட்டு சேகரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

அதன்படி, அவர், உடையார் நகர், வன்னியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்த அவர், அவர்களின் குறைகள், தேவைகள் மற்றும் தொகுதி மேம்பாடு தொடர்பான கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, தொகுதி வளர்ச்சிக்காக மேற்கொள்ள உள்ள திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.

பிரசாரத்தின்போது, பொதுமக்கள் அசோக் ஆனந்தை அன்புடன் வரவேற்று, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இது குறித்து அசோக் ஆனந்த் கூறுகையில், ‘வீடு வீடாகச் சென்று மக்களை நேரில் சந்தித்து பேசுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் என்னை அன்புடன் வரவேற்று, வெற்றி பெறச் செய்வோம் என்று உறுதி தெரிவித்துள்ளனர். இந்த அன்பும் ஆதரவும் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது’ என்றார்.

மேலும், ஜக்கு சின்னத்திற்கு ஓட்டுகள் அளித்து தன்னை வெற்றி பெற செய்திட வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். பிரசாரத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us