என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தன் புதுப்பேட்டை, முருகேசன் நகரில் ஓட்டு சேகரிப்பு
என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தன் புதுப்பேட்டை, முருகேசன் நகரில் ஓட்டு சேகரிப்பு
ADDED : செப் 18, 2026 08:03 PM
புதுச்சேரி: 25 ஆண்டு கால சாதனைகளை எடுத்துக் கூறி வாக்காளர்களை சந்தித்து தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தன் தீவிர ஓட்டு சேகரித்தார்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், என்.ஆர்.காங்., வேட்பாளராக அசோக் ஆனந்தன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை, முருகேசன் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, கடந்த 25 ஆண்டுகளாக தொகுதி மக்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகள் மற்றும் பொதுச்சேவைகள் எடுத்து குறித்து வாக்காளர்களிடம் எடுத்துரைத்தார். மேலும், தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றுவதற்கும், தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அசோக் ஆனந்தனின் வருகைக்கு பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அவரது நீண்டகால கல்விச் சேவை மற்றும் பொதுச்சேவைகளை நினைவுகூர்ந்த வாக்காளர்கள், ‘மீண்டும் நீங்கள் வெற்றி பெற்று, உங்களது கல்விச் சேவையும் பொதுச்சேவையும் தொடர்ந்து சிறப்பாக செய்ய வாழ்த்துகள்’ என, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
