தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார்  தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார்  தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார்  தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


ADDED : ஜூலை 04, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 08:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. 

கடலுார், கோண்டூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 65; இவர், தனது ‘ேஹாண்டா அமேஸ்’ காரில் நேற்று காலை ராமாபுரம் சென்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வீடு திரும்பினார். காரை வீட்டின் எதிரில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். 

சிறிது நேரத்தில் காரின் முன்பகுதியில், திடீரென புகை ஏற்பட்டது. தொடர்ந்து, காரின் இன்ஜின் பகுதி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வீரபாகு தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் இன்ஜின், பேட்டரி உள்ளிட்டவை எரிந்து சேதமானது. விசாரணையில், பேட்டரி ஒயரில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து தெரிந்தது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us