தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில் இருதய சிறப்பு மருத்துவ முகாம்

எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில் இருதய சிறப்பு மருத்துவ முகாம்

எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில் இருதய சிறப்பு மருத்துவ முகாம்


ADDED : ஏப் 29, 2024 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2024 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தின் 12ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இருதய சிறப்பு மருத்துவ முகாம் வரும் 1ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரியின் முதல் ஒருங்கிணைந்த நீரிழிவு நோய் மற்றும் பல்நோக்கு மருத்துவ மையமான, எம்.வி.ஆர். மருத்துவ மையத்தின் 12ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை அனைத்து உடல் நல பரிசோதனைகளுக்கும் 50 சதவீத சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் வரும் 1ம் தேதி இருதய சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமில் சென்னை மெட்வே இருதய மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெய்சங்கர், எம்.வி.ஆர்., மருத்துவ மையத்திற்கு வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

முகாமில் இ.சி.ஜி, மார்பு எக்ஸ்ரே மற்றும் எக்கோ (இருதய ஸ்கேன்) உட்பட ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான பரிசோதனைகள் ரூ. ஆயிரத்திற்கு சிறப்பு சலுகை கட்டணத்தில் செய்யப்படும். ரூ. 1500 மதிப்பிலான ரத்த சர்க்கரை அளவு, உணவுக்கு முன், பின், கொழுப்பு அளவு பரிசோதனைகள் ரூ. 750க்கு சிறப்பு சலுகை கட்டணத்தில் செய்யப்படும்.

மருத்துவரின் அறிவுரைப்படி தேவைப்படுவோருக்கு 'டிரட் மில் இ.சி.ஜி' பரிசோதனை ரூ. 500 க்கு செய்யப்படும். முகாமில் நீரிழிவு நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமன், இருதய பாதிப்பு உடையவர்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

மேலும் மயக்கம், தலைசுற்றல், நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் மற்றும் பொதுவான உடல் நல பரிசோதனைகள் செய்துகொள்ள விரும்புபவர்களும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். ரத்த பரிசோதனைகள் செய்து கொள்ள காலை 8 மணிக்குள் வெறும் வயிற்றில் வரவேண்டும்.

முன்பதிவுக்கு 90477 91662, 0413-2252662, 2257662, 225663 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us