தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்.,கட்சிக்கு பிரசாரம் செய்த 3 பேர் மீது வழக்கு

காங்.,கட்சிக்கு பிரசாரம் செய்த 3 பேர் மீது வழக்கு

காங்.,கட்சிக்கு பிரசாரம் செய்த 3 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 10, 2024 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2024 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் காங்., கட்சிக்காக அனுமதியின்றி சைக்கிள் பிரசாரம் செய்த மூவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் தேர்தல் பறக்கும்படை 5வது பிரிவு அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது, முத்தையா முதலியார் வீதியில் 3 நபர்கள்,கை சின்னத்துடன் கூடிய விளம்பர பதாகைகள் கொண்ட ஒரு வண்டியை சைக்கிளில் பொருத்தி கொண்டு வலம் வந்தனர்.

பறக்கும்படையினர் சைக்கிள் விளம்பரம் கொண்டு வந்தவர்களை மடக்கி சோதனை செய்தபோது, தேர்தல் துறையில் அனுமதியின்றி பிரசாரம் செய்தது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, மூவரின் சைக்கிள் மற்றம் விளம்பர வண்டிகளை பறிமுதல் செய்த பறக்கும்படையினர், அய்யங்குட்டிப்பாளையம், கிருபாகரன், 20; காந்தி திருநல்லுார், சுகந்தகுமார், 20; முத்திரைப்பாளையம் சிவராமன், 20 ஆகியோர் மீது முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் மூவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us