/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
ADDED : மே 03, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பெண்ணை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முருங்கப்பாக்கம், சேத்திலால் நகர் ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர் பழனியம்மாள், 39. அப்பகுதியில் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த உதயா, செல்வம், உஷா, சவுமியா உட்பட ஐந்து பேர் சண்டைப்போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை பழனியம்மாள் விலக்கிவிட்டார்.
ஆத்திரமடைந்த ஐந்து பேரும் பழனியம்மாளைதாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில், ஐந்து பேர் மீதும் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.