தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் விதிமீறல் பா.ஜ., வினர் மீது வழக்கு

தேர்தல் விதிமீறல் பா.ஜ., வினர் மீது வழக்கு

தேர்தல் விதிமீறல் பா.ஜ., வினர் மீது வழக்கு


ADDED : ஏப் 05, 2024 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2024 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் மகளிர் சுய உதவிக்குழு மீதும், சேதராப்பட்டில் பா.ஜ.வினர் மீது தேர்தல் விதிமீறலில் ஈடுப்பட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பிரசாரத்திற்கு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி பெறுகின்றனர். ஆனால், கூட்டம் கூட்டமாக பங்கேற்பதை தேர்தல் பறக்கும்படையினர் கண்காணித்து வருகின்றனர்.அதன்படி, கடந்த 28 ம் தேதி சேதராப்பட்டு பெட்ரோல் பங்க் அருகில் நடந்த பா.ஜ., கட்சி ஊர்வலத்தில் அளவுக்கு அதிகமான ஆட்கள் பங்கேற்று தேர்தல் விதிமுறையை மீறியதாக, தேர்தல் பறக்கும்படை அதிகாரி பிரபாகரன் சேதராப்பட்டு போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.,வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல், முதலியார்பேட்டை உழந்தைகீரப்பாளையம் அகத்தியர் மகாலில் கடந்த 30ம் தேதி, தேசிய மலர் சுய உதவிக்குழுவினர் செயல் அலுவலர்கள் கூட்டம் நடந்தது. அதில் 80க்கும் மேற்பட்ட மகளிர் பா.ஜ., கட்சி கொடியுடன் பங்கேற்றனர். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என தேர்தல் நிலை கண்காணிப்பு குழு தரணிதரன் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சுய உதவிக்குழு தலைவி ராஜேஸ்வரி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us