/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : மே 31, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
அரியாங்குப்பம், ஓடைவெளியை சேர்ந்தவர் கலைச்செல்வன், 62. இவரது மனைவி ஷாலினி, வட்டிக் கடையில் வைத்துள்ள நகைக்கு வட்டி கட்ட பணம் வேண்டும் என, கலைச்செல்வனிடம் கேட்டார். ஆத்திரமடைந்த அவர், ஷாலினியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
ஷாலினி கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.