/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : ஆக 13, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
நைனார்மண்டபம் சுதானா நகரைச் சேர்ந்தவர் கலைவாணி 40, இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவரது கணவர் சூரியபிரகாஷ் 43, இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு திரிந்து வந்தார். இதனை தட்டிக்கேட்ட மனைவி கலைவாணியை கடந்த 30ம் தேதி காலை உருட்டுகட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பலத்த காயமடைந்த கலைவாணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சூரியபிரகாஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

