/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டாக்டரை தாக்கிய நபர் மீது வழக்கு
/
டாக்டரை தாக்கிய நபர் மீது வழக்கு
ADDED : மே 02, 2024 06:25 AM
புதுச்சேரி, : அரும்பார்த்தபுரம், காந்தி வீதியைச் சேர்ந்தவர் இனியகுமார், 30; அரியாங்குப்பம் இ.எஸ்.ஐ., மருத்துவமனை டாக்டர். நேற்று காலை 10:00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து ரெட்டியார்பாளையம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
கம்பன் நகர் சந்திப்பு அருகே சென்றபோது, குறுக்கே வந்த கே.டி.எம்., பைக் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தார்.
அப்போது, இனியகுமாரின் பைக், கே.டி.எம். பைக் மீது லேசாக மோதியது. பைக்கில் வந்த நபர் இனியகுமாரை தாக்கி, பைக் பழுது நீக்க பணம் வேண்டும் என கேட்டார். 1,000 ரூபாயை கூகுள் பே மூலம் இனியகுமார் அனுப்பிய பின், அந்த நபர் அங்கிருந்து சென்றார்.
இனியகுமார் புகாரின் பேரில், கே.டி.எம். பைக் ஓட்டி வந்த நபர் மீது தாக்குதல், ஆபாசமாக திட்டுதல் பிரிவின் கீழ் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

