/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொலை வழக்கு சாட்சிகளை மிரட்டிய மூவர் மீது வழக்கு
/
கொலை வழக்கு சாட்சிகளை மிரட்டிய மூவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 12, 2024 02:16 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கொலை வழக்கில் சாட்சி கூறிவிட்டு வந்த கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை மிரட்டிய, மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்புரளம் அருகே கப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியன்,63; இவர் மகன் ராஜன்,22; என்பவரை, விழுப்புரம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கார்த்திக்,26; ஒருகோடி கிராமம் சத்யராஜ், 27; ரவீந்திரன்,24; ஆகியோர், கடந்த ஆண்டு கொலை செய்தனர். காணை போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக் உட்பட மூவரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முனியன், அவரது மனைவி கஸ்துாரி, 55; மகள் ரேவதி,30; ஆகியோர் நேற்று சாட்சி கூறிவிட்டு வந்தனர்.
அப்போது வெளியே நின்றிருந்த குற்றவாளிகளான கார்த்திக் உட்பட மூவரும் சேர்ந்து, முனியன் உட்பட மூவரையும் மிரட்டி தாக்க முயன்றனர். புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் கார்த்திக் உட்பட மூவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.