மாஜி அமைச்சரை அவதுாறாக பேசிய யூ டியூபர் மீதான வழக்கு ஒத்திவைப்பு
மாஜி அமைச்சரை அவதுாறாக பேசிய யூ டியூபர் மீதான வழக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 06, 2026 08:00 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவதுாறாக பேசிய யூ டியூபர் குடியாத்தம் குமரன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து கடந்த 2025ம் ஆண்டு யூ டியூபர் குடியாத்தம் குமரன் அவதுாறாகவும், கொச்சையான கருத்துகளை கூறியும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருந்தார்.
இது குறித்து, விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட் (1) ல் கடந்தாண்டு மே 23ம் தேதி அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் (தெற்கு) சுரேஷ்பாபு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு, கடந்தாண்டு செப்டம்பர் 16ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது. பின், மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், யூ டியூப்பில் இருந்து அந்த அவதுாறான வீடியோவை விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் நீக்கினர்.
இவ்வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று விழுப்புரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் இனியா கருணாகரன், இவ்வழக்கு விசாரணையை நாளை (8ம் தேதி)க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
