ADDED : ஜூலை 06, 2026 08:11 PM
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் சந்திப்பு அருகே ரகளையில் ஈடுபட்ட கடலுார் சொத்திக்குப்பத்தை ராஜவேலு 36; கரையாம்புத்துார் ஏரிகரை சாலையில் ரகளையில் ஈடுபட்ட கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் 24; ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, முள்ளோடை சந்திப்பு அருகே பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட தேவனாம்பட்டினம் செல்வக்குமார் 31; நரம்பை கடற்கரை பகுதியில் ரகளை செய்த வம்பாபேட் சுந்தரேசன் 39; ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
